TNRD Clerk Recruitment 2026
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதி திராவிடர் (SC) பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
இந்த வேலைக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை மற்றும் மாவட்ட வாரியான கடைசி தேதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
TNRD Clerk Recruitment 2026 Highlighights
| நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பதவி | எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 01.09.2026 |
| கடைசி தேதி | மாவட்டத்தைப் பொறுத்து மாறுபடும் |
1. பதவி: பதிவறை எழுத்தர் (Record Clerk)
சம்பளம்: மாதம் Rs.15,900 – 58,500/-
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
2. பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)
சம்பளம்: மாதம் Rs.15,900 – 58,500/-
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி, மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
3. பதவி: ஓட்டுநர் (Driver)
சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம்.
இதர தகுதி: மோட்டார் வாகன சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1988)- ன்படி – தமிழக அரசின் தகுந்த அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
இந்திய ரயில்வே Station Master, Ticket Supervisor, Clerk வேலைவாய்ப்பு!
வயது வரம்பு:
பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர்
i) ஆதி திராவிடர் (SC) – 18 to 37 வயது
ii) மாற்றுத்திறனாளிகள் – 18 to 47 வயது
iii) முன்னாள் இராணுவ வீரர் – 18 to 55 வயது
ஓட்டுநர்
i) ஆதி திராவிடர் (SC) – 18 to 42 வயது
ii) மாற்றுத்திறனாளிகள் – 18 to 52 வயது
iii) முன்னாள் இராணுவ வீரர் – 18 to 55 வயது
விண்ணப்ப கட்டணம்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க எந்தவித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாவட்ட வாரியான கடைசி தேதி
| மாவட்டம் | கடைசி தேதி |
| பெரம்பலூர் | 30.09.2026 |
| சிவகங்கை | 30.09.2026 |
| திருவாரூர் | 28.09.2026 |
| நீலகிரி | 29.09.2026 |
| இராமநாதபுரம் | 30.09.2026 |
| மதுரை | 10.10.2026 |
| திருச்சி | 09.10.2026 |
| சிவகங்கை | 30.09.2026 |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை அந்தந்த மாவட்டத்தின் இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை?
1) விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2) பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணபத்தினை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
3) விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
4) வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும். தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும்.
5) முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
6) காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
7) தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்த விபரங்கள் நேர்காணல் கடிதம் (Call Letter) மூலம் தனியே அனுப்பி வைக்கப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| மாவட்டம் | அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் |
| பெரம்பலூர் | Click here |
| சிவகங்கை | Click here |
| திருவாரூர் | Click here |
| நீலகிரி | Click here |
| இராமநாதபுரம் | Click here |
| மதுரை | Click here |
| திருச்சி | Click here |
| சிவகங்கை | Click here |
பிற மாவட்டங்களில் பணியிடங்கள் அறிவிக்கப்படும் போது இந்தப் பதிவு தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.
