TIFR Recruitment 2026
மத்திய அரசின் கீழ் செயல்படும் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான Tata Institute of Fundamental Research (TIFR) நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி Scientific Officer, Scientific Assistant, Tradesman, Clerk மற்றும் Work Assistant உள்ளிட்ட மொத்தம் 8 வகையான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் ITI, Diploma, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, M.Sc மற்றும் Ph.D முடித்தவர்கள் வரை அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.36,360 முதல் ரூ.1,40,150 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 24.11.2026க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்
1. Scientific Officer (D) – Veterinarian
கால்நடை மருத்துவப் பிரிவில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்களுக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு M.V.Sc பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Rodent Laboratory Animal Facility பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவமும் Veterinary Council-ல் செல்லுபடியாகும் பதிவும் அவசியம். அதிகபட்ச வயது 35 ஆகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.1,40,150 சம்பளம் வழங்கப்படும்.
2. Scientific Officer (D)
Accelerator Physics அல்லது Experimental Nuclear Physics துறையில் Ph.D முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதுகலைப் படிப்புக்குப் பிறகு குறைந்தது 2 ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 35 ஆகும். இப்பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. மாதச் சம்பளம் ரூ.1,40,150 வழங்கப்படும்.
3. Scientific Assistant (B) – EWS பிரிவு
Biology, Microbiology, Biotechnology அல்லது Life Sciences ஆகிய துறைகளில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றாக, Life Science பிரிவில் 60% மதிப்பெண்களுடன் Diploma முடித்தவர்களும் தகுதியுடையவர்கள். கணினி அறிவு அவசியம். பட்டதாரிகளுக்கு ஒரு ஆண்டு ஆய்வகப் பணி அனுபவமும், Diploma முடித்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவமும் தேவை. அதிகபட்ச வயது 28. மாதச் சம்பளம் ரூ.73,020. ஒரு காலியிடம் உள்ளது.
8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை!
4. Scientific Assistant (B)
Computer Science, Information Technology பிரிவுகளில் B.Sc அல்லது BCA முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், Computer Engineering அல்லது Information Technology பிரிவில் Diploma முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். Linux, PHP Frameworks மற்றும் Web Development தொடர்பான அறிவுடன் குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம். அதிகபட்ச வயது 28. மாதச் சம்பளம் ரூ.73,020. ஒரு காலியிடம் நிரப்பப்பட உள்ளது.
5. Tradesman (B) – Turner
Turner தொழிற்பிரிவில் NTC முடித்து குறைந்தது 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டு ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவத்துடன் விண்ணப்பிக்கலாம். அல்லது அதே பிரிவில் NAC முடித்து 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு ஆண்டு அனுபவத்துடன் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது 33. இப்பணிக்கு இரண்டு காலியிடங்கள் உள்ளன. மாதச் சம்பளம் ரூ.46,990.
6. Clerk (A)
ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்து குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், Typing மற்றும் Computer Knowledge தொடர்பான சான்றிதழ்களுடன் குறைந்தது ஒரு ஆண்டு அலுவலகப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 28. மாதச் சம்பளம் ரூ.46,990. ஒரு காலியிடம் உள்ளது.
7. Work Assistant (Auxiliary)
குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதலாக ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம். அதிகபட்ச வயது 28 ஆகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.36,360 சம்பளம் வழங்கப்படும். ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
8. Work Assistant (Technical) – Fitter
Fitter தொழிற்பிரிவில் NTC முடித்தவர்கள் அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தொடர்புடைய பிரிவில் குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 28. மாதச் சம்பளம் ரூ.36,360. இப்பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது.
வயது வரம்பில் தளர்வு
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) பொதுப்பிரிவு மற்றும் EWS பிரிவில் 10 ஆண்டுகளும், OBC பிரிவில் 13 ஆண்டுகளும், SC/ST பிரிவில் 15 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு (Ex-Servicemen) அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம்
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் கிடையாது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தாமல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை
Scientific Officer பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Scientific Assistant பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மட்டும் நடத்தப்படலாம்.
Tradesman, Clerk மற்றும் Work Assistant பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் திறன் அல்லது தொழில்நுட்பத் தேர்வு (Skill/Trade Test) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
TIFR நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுமையாகப் படிக்க வேண்டும். பின்னர், தங்களுக்குப் பொருத்தமான பணியிடத்தைத் தேர்வு செய்து, தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர விவரங்களுடன் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.11.2026
விண்ணப்பிப்பதற்கு முன்பு ஒவ்வொரு பணியிடத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் இதர நிபந்தனைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்துக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
